குரூப் 5A தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 35 காலி பணியிடங்களுக்கு குரூப் 5A தேர்வு நடைபெறவுள்ளதாகவும், தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 4ம் தேதி குரூப் 5A தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ள தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம், பொதுத்தமிழ், ஆங்கிலம் என இரண்டு தாள்களாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.