நாகர்கோவில்-கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்ட வாஞ்சி மணியாச்சி விரைவு ரயிலில் பயணித்த சிறுவன் மீது இருக்கை விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூ என்பவரது மனைவி புவிதா தனது 4 வயது மகன் ஜெய்சன் மோசசுடன் வாஞ்சி மணியாச்சி ரயிலில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் மேல் இருக்கை ஒன்று சிறுவன் மேல் விழுந்துள்ளது. இதில் சிறுவனின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரை வந்தடைந்த ரயிலில் இருந்து தாயும் மகனும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சிறுவன் காயத்துடன் உயிர் தப்பினார் என்ற செய்தி அறிந்த பின்னரே சக பயிணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்