நாகை மாவட்டம் கீழ்வேளூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிள்ளை தெருவாசல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது எனவும், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான வாடகையை செலுத்தக்கோரியும் அதிகாரிகள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.