திண்டுக்கல்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஊழல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனபாலன், தனது வார்டில் பாதாள கழிவுநீர் கால்வாய் அமைத்துதர மாநகராட்சி நிர்வாகம் மறுப்பதாகவும், மாநகராட்சி பணிகளில் ஊழல் நடைபெற்றதாகவும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.