சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஏரி முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாலப்பாக்கம் பெரிய ஏரியில் ஒருபுறம் ஆகாயத்தாமரை படர்ந்திருக்கும் நிலையில், மறுபுறம் ஏரியின் உபரிநீர் வெளியேறக்கூடிய இரு மதகுகளும் உடைப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றன.
இதனால் உபரிநீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்தாண்டு பெய்த கனமழையால் மதகு உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கும் மக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மழைக்கு முன்பாக சேதமடைந்த இரு மதகுகளையும் சீரமைத்து, ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.