அமெரிக்காவில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை 1 புள்ளி 80 லட்சம் கோடி டாலர் என அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டைவிட இது 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் பல லட்சம் கோடி டாலர்களை அமெரிக்க அரசு செலவிட்டதால், பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்தது.
நடப்பு நிதியாண்டில் அதுபோன்ற பெரிய செலவழிப்பு ஏதுமின்றி மூன்றாவது மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறையை நாடு சந்தித்தள்ளது.