இஸ்ரேல் மக்களை தாக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னையும், தனது மனைவியையும் படுகொலை செய்ய ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி எந்த விதத்திலும் தங்கள் பணியை தடுக்காது எனக் கூறியுள்ளார்.
தங்கள் குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்போருக்கு இஸ்ரேல் அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.