லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது.
ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் மூலம் ஹிஸ்புல்லாக்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
பரபரப்பான இந்தச்சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த ஹிஸ்புல்லா உளவுப்பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதுடன், ஈரானை தாக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
,இதேபோல் வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில் பல்வேறு கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி 87 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், எஞ்சிய நபர்களைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
















