மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்! : சென்னை உயர் நீதிமன்றம்
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்! : சென்னை உயர் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியல் வெளியானாலும் கூட உரிய ஆவணங்களுடன் தாமதமாக விண்ணப்பித்த மாணவியை கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் 1964ம் ஆண்டு முன் பிறந்த பட்டியலினத்தவர்களுக்கு பூர்வகுடி பட்டியலினம் என்றும் மற்றவர்கள் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் எனவும் வகைப்படுத்தி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஜா மருத்துவ படிப்பில் சேர்வதற்காக பட்டியலின பிரிவில் தகுதியான விண்ணப்பத்துடன் விண்ணப்பித்தும், புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் பிரிவில் பங்கேற்றதால் எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடம் கிடைக்காமல், பல்மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து வில்லியனூர் தாசில்தார், ஸ்ரீநிஜாவுக்கு, அவரின் தாயாரின் ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக பட்டியலினம் என்ற சாதி சான்றிதழை வழங்கினார்.

இதன் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி ஸ்ரீநிஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மாணவி ஸ்ரீநிஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், புதுச்சேரி உயர்கல்வி மாணவர் சேர்க்கைகான சென்டாக்கின் விதியை கருத்தில் கொள்ளாமல், தனி நீதிபதி முடிவெடுத்திருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையேற்ற சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மருத்துவ கலந்தாய்வில் மாணவி ஸ்ரீநிஜா கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

Tags: Must be allowed to attend medical consultation! : Madras High Court
ShareTweetSendShare
Previous Post

பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

Next Post

பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறிய ஆதீனம்!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies