உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஓய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை 456 அமர்வுகளில் 117 தீர்ப்புகளை வழங்கியுள்ள சஞ்சீவ் கண்ணா, நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















