பாஜக நிறுவன தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தனது கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டார்.
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு லட்சக்கணக்கானோர் கட்சியில் சேர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே கட்சி பணியாற்றி வரும் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக நிறுவன தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டுள்ளார்.