வங்கதேசத்தில் சிறுபான்மையிராக உள்ள இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி சனாதன் ஜகாரன் மஞ்சா சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவ்வப்போது அங்கு வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை வலியுறுத்தி சனாதன் ஜகாரன் மஞ்சா சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுபான்மையினர் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும், சிறுபான்மை விவகார அமைச்சகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. சட்டோகிராம் பகுதியில் தொடங்கிய இந்த பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.