முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு - முக்கிய நபரான சுஜீத் சுஷில் சிங் கைது!
Jul 1, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு – முக்கிய நபரான சுஜீத் சுஷில் சிங் கைது!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மும்பையைச் சேர்ந்த சுஜீத் சுஷில் சிங்கைக் கைது செய்ததாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார்.

அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்மநபர்கள், காரில் இருந்த சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடலில் குண்டுகள் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுசெய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த மும்பையை சேர்ந்த சுஜீத் சுஷில் சிங்கை போலீசார் தற்போது கைது  செய்துள்ளனர். இந்நடவடிக்கையில் மும்பை காவல் துறையுடன் இணைந்து, கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பஞ்சாப் டிஜிபி ட்வீட் செய்துள்ளார். சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலே கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: Punjab PoliceSujeet Sushil Singh arrestedformer Maharashtra minister Baba SiddiquiBaba Siddiqui murder case
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடி நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!

Next Post

12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா – 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி!

Related News

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies