தெலங்கானாவில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள கடை ஒன்றில் பொதுமக்கள் பட்டாசு வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டதால், பட்டாசுகள் வெடித்து சிதறின.
உடனடியாக கடையில் இருந்து அலறியடித்து பொதுமக்கள் வெளியேறினர். இந்த விபத்தில் தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.