தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வாரச்சந்தைகளில் ஆடுகள், கோழிகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வார சந்தையில் ஆடுகளை வாங்க, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் சித்தூர், கர்நாடகாவின் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்தனர்.
அதிகாலை 3 மணியளவில் ஆடு விற்பனை தொடங்கிய நிலையில், 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் அளவுக்கு ஏராளமான ஆடுகள் விற்பனையானதால், ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.