சேலம் மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டத்தை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் தொடங்கி வைத்தார்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலம் மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு கல்லூரிக்கு ஒரு பெண் காவல் அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டு மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.