கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக தெரிவித்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தன்னை கைது செய்த காவல்துறையினர் 2 நாட்கள் சட்டவிரோதமாக வைத்திருந்தாகவும், தான் கைது செய்யப்பட்டது குறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை சார்பில் இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து தீர்ப்பை தள்ளி வைத்தார்.