மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர் காரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குருபூஜைக்கு, ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் சென்றுவிட்டு, காரில் திரும்பியுள்ளார்.
கார் ஜன்னலில் அமர்ந்து வந்த அவர், எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.