தீபாவளி என்றாலோ புத்தாடை, பட்டாசு, இனிப்புக்கு அடுத்தபடியாக அன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகம். இந்த தீபாவளிக்கு என்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன? என்பது பற்றி பார்க்கலாம்.
தீபாவளி அப்படின்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி போகாது. சின்ன பசங்களுக்கு பட்டாசு வெடிக்கிறதுன்னா, அம்மாக்களுக்கு வீட்டுல வித விதமான பலகாரங்கள சுடனும், அதுவே அப்பாக்களுக்கு நம்ம வாங்கி கொடுத்த டிரஸ்லாம் ரசிக்கிறது பிள்ளைகள பாத்துகிறதுன்னு வித விதமான போகும்.
இங்க நம்ம இளைஞர்கள விட்டுட முடியாது தீபாவளின்னா இவங்க அட்ராசிட்டிஸ் பயங்கரமா இருக்கு. கலர் கலரா டிரஸ்ச போட்டுட்டு ஏறியாகுள்ள ஸ்டைலா சுத்துறதுன்னு கலர் புல்லா தீபாவளிய கொண்டாடுவாங்க.
இப்படி ஒரு பக்கம் இருக்க சினிமா கொடுக்குற விருந்து எப்போமே ஸ்பெஷல்தான். தீபாவளிக்கு தமிழ் சினிமாவ பொருத்தவர தல இல்ல தளபதி தீபாவளி தான்.
இப்படி வருஷா வருஷா தீபாவளிக்கு என்ன படம் ரிலீஸ் ஆக போதுன்ற எதிர்பார்ப்பு இருந்துட்டே இருக்கும். அப்படி தான் இந்த வருஷமும், மொதல்ல டிவிஸ்ட் லருந்து ஆரம்பிப்போம். அஜித் உடைய விடாமுயற்சி படம் வெளியாக போதுன்னு இந்த வருஷ ஆரம்பத்துலருந்து எதிர்பார்த்திட்டு இருந்த ரசிகர்களுக்கு மிஞ்சுனது எதுவோ வெறும் படத்தோட லுக் போஸ்டர்ஸ் மட்டும் தான்.
பாலிவுட்ட பொருத்தவர ஒரு பெரிய பிரபலங்களோட பட்டாளத்துல சிங்கம் Againன்ற படம் ரிலீஸ் ஆகுது இந்த படத்த பத்தி சொல்லனுன்னா நடிகர் சூர்யாவுக்கு பாலிவுட்டுல நல்ல வரவேற்பு இருக்குறதால் வேட்டையன்னால கங்குவா தள்ளிப்போகும் பொழுது சிங்கம் Againன்ற படத்தால கங்குவாவ தள்ளி வெச்சாங்க. அப்படியே மல்லுவுட் பக்கம் போனா லக்கி பாஸ்கர்.
இப்போ தமிழுக்கு வருவோம். உங்களால படத்துக்கு போக முடியலன்னா ஒன்னு பீல் பன்னாதீங்க நாங்க இருக்கோம்ன்னு ஓடிடில தங்கலான், லப்பர் பந்து, மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் ஆகுது.
தியேட்டர பொருத்தவர பிலடி பெக்கர். இந்த படத்த பத்தி சொல்லனுன்னா சிவ கார்த்திக்கேயனுக்கு நான் போட்டி இல்லன்னு சொல்ற கவின் டிவிஸ்ட் கொடுத்திருக்காறுன்னு சொல்லலாம்.
இயக்குநர் ராஜேஸ் பத்தி நள்ளாவே உங்களுக்கு தெரியும் பாஸ் என்கிற பாஸ்கரன், ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு காமெடில பட்டைய கிளப்பினாரு இவரு இயக்கத்துல ஜெயம் ரவி நடிப்பில வெளியாகுது பிரதர்.
ஹ்ம்ம் இதலாம் தாண்டி என்ன கியூட்ல அப்படின்னு சாய் பல்வி, சிவ கார்த்திகேயன் இன்ட்ரோவிலும், ஜிவி மியூசிக்லையும் வெளியான சின்ன வீடியோ ஒட்டுமொத்தமா எல்லாரையும் திரும்பி திரும்பி பாக்க வெச்சு கண்ணு கலங்க வெச்ச அமரன் இவங்க வருசையில முதல் லைன்ல நிக்கிது.
ரைட்டு படம் பாக்குறைவைங்க, வெடி கொளுத்துரவைங்க, எங்களுக்கு எல்லாமே சோறு தான் சோறு தான் முக்கியம்ன்னு சொல்றவைங்க இந்த கேட்டகிரிலா ஒரு பக்கம் இருந்தாலும் என்ன நடந்தாலும் தூக்கத்த விட்டு கொடுக்க மாட்டேன்னு தூங்கி எந்திச்சு தூங்கி தூங்கி தூங்கி தூங்கி எந்துச்சு தூங்கியே தீபாவளிய கடத்த நினைக்கிறவங்களுக்கு இந்த வீடியோவ சமர்ப்பிக்கிறோம்…!
கைப்புள்ள என்ன முழிச்சிட்டு இருக்க…!