சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சிசுவின் பாலினம் கண்டறியப்பட்ட வழக்கில் பெண் மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நிஹாரிகா என்ற தனியார் மருத்துவமனையில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் மருத்துவமனையில் வைத்து சிசுவின் பாலினம் கண்டறியப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவர் செல்வாம்பாளிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குற்றம் உறுதியானதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் மருத்துவமனையில் 5 ஆண்டுகள் சிகிச்சைக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.