சென்னை சென்ட்ரல் உட்பட 6 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டு விற்பனையை நிறுத்தி வைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 6 ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், மூத்த குடிமக்களை வழியனுப்ப வரும் நபர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.