தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 303 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் எஸ்.நாயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முந்தைய ஆண்டில் வங்கியின் நிகர மதிப்பு 8 ஆயிரத்து 430 கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது அந்த நிகர மதிப்பு 7 ஆயிரத்து 384 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த அரையாண்டில் தமிழ்நாடு முழுவதும் 15 புதிய கிளைகளை திறந்திருப்பதாகவும் எஸ்.நாயர் கூறினார்.