சேலத்தில் திமுக பிரமுகரை குற்றம்சாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
பூமி நாயக்கன்பட்டியை சேர்ந்த டேவிட் குமார் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது குடும்பத்தினரை பொதுவழியில் செல்ல விடாமல் பாலையன் என்கிற திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், டேவிட் குமாரின் மனைவியை திமுக நிர்வாகி தாக்கியதால் அவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டேவிட் குமார், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நிலையில், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.