ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த பின் தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது 300 சிசிடிவி கேமராக்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.