ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி திரளான மக்கள் பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள திரளான பொதுமக்கள் பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்தும், முடிகாணிக்கை கொடுத்தும் வழிபாடு நடத்தினர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.