தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடியில், போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக சென்ற ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களை சரிபார்த்த அவர்கள், பயணிகளிடம் கட்டண வசூல் தொடர்பாக விசாரித்தனர். மேலும், கட்டணம் தொடர்பாக, பயணிகளின் செல்போன்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியையும் போலீசார் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை பின்பற்றாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அவர்கள் அபராதம் விதித்தனர்.
ஆனால் முன்பதிவு தளங்களில் மூன்று மடங்கு வரை விலை உயர்ந்து டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.