மும்பையில் காங்கிரஸ் தலைவர் ரவி ராஜா அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
அவரை மும்பை நகர பாஜக தலைவர் ஆசிஷ் ஷெலார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவீஸ், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக கூட்டணியை சேர்ந்த சிலரை தாங்கள் சமாதானப்படுத்தி வருவதாகவும், வரும் 5-ஆம் தேதிக்குள் பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபடுவோம் என்றும் கூறினார்.