சென்னை புறநகர் பகுதியான எண்ணூரில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.
எண்ணூர் காமராஜர் பகுதியில் சிலர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகிலிருந்த குடிசை வீடுகள் மீது தீப்பொறி பட்டு தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனையடுத்து குடிசை வீடுகளில் தங்கியிருந்த அனைவரும் அலறியடித்து வெளியேறிய நிலையில், வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கட்டுக்கடங்காமல் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.