சேலத்தில் உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் ஆணைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் அருவி ஆகியவற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.