சேலத்தில் வணிகம் செய்துவரும் வட மாநிலத்தவர்கள் வியாபாரம் சிறக்க வேண்டி லட்சுமி குபேர பூஜை நடத்தினர்.
செவ்வாய்ப்பேட்டை, நாராயணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த பலர் வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்கள், வியாபாரம் சிறப்பாக நடைபெற வேண்டி தீபாவளிக்கு மறுநாளான இன்று லட்சுமி குபேர பூஜை நடத்தினர். பூஜை முடிந்த பிறகு விற்பனையை தொடங்கிய அவர்கள், வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தனர். இதனைத்தொடர்ந்து நாளை மீண்டும் தங்களது கடையை திறந்து புதிய கணக்குடன் விற்பனையை துவங்க உள்ளனர்.