கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கனமழை காரணமாக ஏழு எருமை நீர்ப்பள்ளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய தண்ணீர் ஏழு எருமைப்பள்ளத்தில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே சென்னம்பாளையம் நீரோடையின் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.