183 சிவ ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சமர்பிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 183 சிவ ஆலயங்களுக்கு காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் அபிஷேகப்பொருட்கள் மற்றும் வஸ்திரங்கள் அனுப்பப்பட்டது.
அவ்வாறு பொருட்களை ஏற்றுக்கொண்ட கோயில்களில் பூஜைகள் நடத்தி பிரசாதங்கள் சங்கர மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த பிரசாதங்களை முன்வைத்து சங்கர மடத்தில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.