ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான ஹார்லிவ்காவில் டிரோன் ஜாமர்கள் பொருத்திய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
டிரோன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஜாமர் கருவிகளை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரோன்கள் மற்றும் ஆபரேட்டருடனான தகவல் தொடர்பை துண்டிக்க ஜாமர்கள் உதவுவதால் குறைவான ஆபத்து அபாயமே ஏற்படுகிறது.
பாதுகாப்புக்காக தாங்கள் செய்யக்கூடிய அதிகபட்ச செயல் இதுதான் என ஹார்லிவ்காவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.