மதுரையில் தீபாவளியையொட்டி இறைச்சி விற்பனை களைகட்டிய நிலையில், இறைச்சி கழிவுகள் வைகை ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியதால் விற்பனை களைகட்டியது. இந்த நிலையில் வைகை ஆற்றை ஒட்டிய நெல்பேட்டையில், இறைச்சி கழிவுகள் மலை போல் கொட்டப்பட்டதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியதால் நோய் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது.