தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் கொடைக்கானல் முக்கிய இடம் வகித்து வருகிறது. தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
அவர்கள், குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















