கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தேவிரம்மா மலைக்கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்தனர்.
பிண்டுகா கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற தேவிரம்மா மலைக்கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த கோயிலில் தேவிரம்மன் சிலையானது கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தீபாவளியையொட்டி கோயிலில் திரளான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், மலையேறும்போது தவறி விழுந்து பலர் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.