தலைநகர் டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் நச்சு நுரை மிதந்து வருவதால், ஆற்றின் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வெள்ளை நிற பனிப்படலம்போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்தகைய மாசுபாடுகளுக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசே காரணம் என பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.