ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான போரில் வடகொரிய வீரர்கள் ஈடுபடுத்தப்படும் விவகாரத்தில் சீனா ஏன் மவுனம் காக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்கொரிய ஊடகம் ஒன்றின் நேர்காணலில் ஜெலென்ஸ்கி பங்கேற்றார். அப்போது, 3,000 வடகொரிய வீரர்கள் ரஷ்ய ராணுவ முகாமில் பயிற்சியில் உள்ளதாக தங்களிடம் தகவல் உள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக உயரலாம் எனவும் குறிப்பிட்டார். பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சீனாவின் மௌனம் ஆச்சரியம் தருவதாகவும் அவர் கூறினார்.