தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கல்லை வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு வழக்கம்போல் பொதிகை ரயில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது கடையநல்லூர் அருகே இருப்புப்பாதையில் பெரிய அளவிலான கல் ஒன்று இருந்ததை ரயில் ஓட்டுநர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியவுடன் தகவலறிந்து வந்த அதிகாரிகள், தண்டவாளத்தில் கல்லை வைத்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.