செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வருடந்தோறும் ஐப்பசி மாத கந்த சஷ்டி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயில் வட்ட மண்டபத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது.