சேலம் மாவட்டம் ஓமலூரில் செயல்பட்டு வரும் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் பண மோசடியில் ஈடுபட்ட கிளை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள இந்த சங்கத்தில் பச்சியப்பன் என்பவர் கிளைமேலாளராகவும், சந்தியா என்பவர் கணக்காளராகவும் இருந்து வந்தனர்.
இவர்கள் சங்க உறுப்பினர்களின் வைப்புத்தொகையான சுமார் 26 லட்ச ரூபாயை மோசடி செய்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பச்சையப்பனை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சந்தியாவை தேடி வருகின்றனர்.