விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் ஊற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அங்காளம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்தவகையில் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் கையில் கற்பூரம் ஏந்தி தரிசனம் செய்தனர்.
இதேபோல், கரூரில் மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க தங்க தேரோட்டம் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் சுவாமி குடி புகுந்தது.