செர்பியா நாட்டின் ஓடினா மாகாணத்தில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்.
நோவி சட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.அப்போது, திடீரென ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.