தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும்,
இதனால், இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நாளை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
வரும் 4-ம் தேதி தொடங்கி 8 -ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.