ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலை மீது உள்ள ருஷிகொண்டா அரண்மனையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார்.
ஒரு லட்சத்து 41 ஆயிரம் சதுர அடிக்கு மேல் மிக ஆடம்பரமான கட்டிடங்கள், லட்சக்கணக்கான விலை உயர்ந்த பர்னிச்சர்கள், இன்டீரியர் அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை அங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
ருஷிகொண்டா பேலஸ் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கட்டப்பட்டது என தெலுங்கு தேசம் கட்சியினர் விமர்சனம் செய்த நிலையில், அந்த பேலஸ் தனக்காக கட்டப்படவில்லை எனவும், அவை சுற்றுலாவை மேம்படுத்த கட்டப்பட்டவை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பினர் விளக்கம் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.