விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இராஜபாளையம் அருகே அமைந்துள்ள அய்யனார்கோவில் பகுதியில் காணப்படும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகமாக நீர் வந்துக்கொண்டிருந்ததால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தடைகளை மீறி ஏராளமானோர் நீரோடையை கடந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 9 பேர் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு மூலம் பொதுமக்களை மீட்டனர்.