ஜம்மு காஷ்மீர் மாநிலன் பாஜக தலைவராக சத் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உ ள்ள 90 தொகுதிகளில் இண்டி கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து தேசிய மாநாட்டு கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார். இந்த தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலன் பாஜக தலைவராக சத் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக ரவீந்தர் ரெய்னாவும், ஜம்முவின் பாஜக தலைவராக சத் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.