சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர பூஜை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், பக்தர்கள் மரணமடைந்தால் உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என கூறினார்.
மண்டல பூஜைக்காக வரும் 15ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் எனவும், 13 ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.