நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 3வது நாளாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக கனமழை பெய்தது.
இதனால் முக்கிய சாலைகளிலும், சிறுவர் பூங்காவிலும் மழை நீர் தேங்கியது. மேலும், பழைய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோட்டின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, பெரியார் நகர் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் குளம்போல் நீர் தேங்கியது. அப்போது, பாதாள சாக்கடையில் இருந்தும் கழிவு நீர் வெளியேறி மழைநீருடன் கலந்தது. இதனால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகினர்.