குளிர்காலம் தொடங்குவதையொட்டி உத்தரகாண்ட் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் மூடப்பட்டது.
பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். ஆகவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம்.
அதன்படி கேதார்நாத் கோயில் இன்று காலை மூடப்பட்டது. இதனையடுத்து கோயிலில் உள்ள பல்லக்கு, உகிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.